விக்னேஸ்வரன் பதவியிலிருந்து விலகத் தீர்மானம்

Report Print Dias Dias in இலங்கை
1816Shares

தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, அதனைக் கட்சி சார்பற்ற வகையில் தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்காக தாம் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவி வகிப்பது சில விமர்சனங்களிற்கு உள்ளாகலாம் என்பதால் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இணைத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதற்கு தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் தான் இன்று காலையில் பேசியதாகவும், தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காகவே இவ்வாறுதான் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.