சீரற்ற காலநிலை தொடர்பில் பொது மக்களிற்கு எச்சரிக்கை

Report Print Dias Dias in இலங்கை
140Shares

நாட்டில் நிலவியுள்ள சீரற்ற காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய. மற்றும் மேல் மாகாணங்களிலும், மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், ஏனைய சில பகுதிகளிலும் 100 முதல் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.