மன்னார் கட்டுக்கரை குளத்தின் அணைக்கட்டுகள் அதிகளவு பாதிப்பு

Report Print Dias Dias in இலங்கை
77Shares

மன்னார் கட்டுக்கரை குளத்தின் 11ம் கட்டை தொடக்கம் குருவில்வான் பகுதிவரையான அணைக்கட்டு மழைகாலங்களில் பாதிக்கபட்டு வருவதை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டுவந்தனர்.

அடிப்படையில் கட்டுக்கரை குளத்தின் நீர்பாசன பொறியியலாளர் சகிதம் நேரடியாக அவ் இடத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பார்வையிட்டார்.

அணைக்கட்டு கடுமையாக பாதிக்கபட்டுள்ளதை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வதாக கூறினார்.

மன்னார் நகரசபை உறுப்பினர் மைகல் கொலின் மற்றும் இந்த அணைக்கட்டு பாதிக்கபட்டுள்ளதை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்த சூசைதாஸ் சுகிர்தன் அங்கு விஜயம் செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.