விடுதலைப்புலிகளின் தலைவரின் நிலைப்பாடும் இது தான்! சம்பந்தன் எச்சரிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தனித்தாயகம் வேண்டுமென்ற கருத்திற்காகவே 30 வருடமாக யுத்தம் செய்து அந்த நிலைப்பாட்டை இல்லாது செய்தோம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,