தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம்

Report Print Steephen Steephen in இலங்கை

கட்டார் நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாருக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தை எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டார் நாட்டில் சுமார் இரண்டு லட்சம் இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் தொழில் புரிந்து வருகின்றனர்.

அதேவேளை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.