தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் சபையில் கடும் சர்ச்சை! நிராகரித்தார் சபாநாயகர்

Report Print Dias Dias in இலங்கை
826Shares

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தலைவர் என்ற ரீதியில் சபையில் முன்வைத்துள்ள நிலையியல் கட்டளை 27/2 கீழ் விசேட கூற்றை என்னால் அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கிறேன்.

ஏனென்றால் இதில் மூன்றாம் பந்தியில் சில வாக்கியங்கள் நீதிமன்ற வழக்குடன் தொடர்புபட்ட காரணிகள் என்பதனால் நிலையியல் கட்டளை 36 (எப்)இற்கு அமைய என்னால் இதனை சபையில் வாசிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27/2இன் கீழான விசேட கூற்றை சபாநாயகர் சபையில் நிராகரித்ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது.

சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்த, சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சிகள் சபையில் சீறிப்பாய்ந்தனர்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிந்த பின்னர் கட்சி தலைவர் கொண்டுவரும் 27/2 இன் கீழான விசேட கூற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார்.