யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! பொலிஸார் - இராணுவத்தினர் குவிப்பு

Report Print Dias Dias in இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களிற்கும், பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, மேலும் அதிகமான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸார் பல்கலைக்கழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது அங்கு குவிந்த பொலிஸார் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்.

எனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனால் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


you may like this..