யாழ். பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி துப்பாக்கியை தயார் செய்த இராணுவம்! சிக்கியது வீடியோ

Report Print Dias Dias in இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களிற்கும், பொலிஸாருக்கும் இடையில் காலையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, மேலும் அதிகமான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் அதனைத் தொடர்ந்து குழப்பமான நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.