ஐந்து நாட்களில் 26000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்

Report Print Kamel Kamel in இலங்கை

கடந்த ஐந்து நாட்களில் 26000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மினுவாங்கொட கொத்தணி தொடர்பான தகவல்கள் பதிவானதை தொடர்ந்து இவ்வாறு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

நோயாளியிடம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சரியான தினத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சரியான நேரத்தில் பரிசோதனை நடத்தப்படாவிட்டால் சில வேளைகளில் இந்த பரிசோதனை முடிவுகள் துல்லலியமான அடிப்படையில் அமையாது.

இதனால் கம்பஹாவில் தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் தொடர்பிலான பரிசோதனைகள் துரித கதியில் நடத்தப்படவில்லை என யாரும் பதற்றமடையத் தேவையில்லை.

சரியான நேரத்தில் சரியான முறையில் பரிசோதனை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.