கடந்த முறையை விட வேகமாக பரவும் கொரோனா! வெளியானது நாடு முடக்கப்படாமைக்கான காரணம்

Report Print Sujitha Sri in இலங்கை

கடந்த முறையை விட இம்முறை நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நாட்டை இதுவரை முடக்காமலிருப்பதற்கான காரணம் வெளிவந்துள்ளது.

இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த முறையை விடவும் இம்முறை நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக காணப்பட்டாலும், நாட்டை முடக்காமல் இருப்பதற்கு அறிவியல் காரணம் காணப்படுகிறது.

அதன்படி இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் அரசாங்கம் இருப்பதுடன், சுகாதார துறையும் நோய் பரவலை தடுப்பதற்கு தேவையான முழுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அத்துடன் மக்களும் இந்த தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த முறையை விட இம்முறை குறித்த வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமாக காணப்படுகிறது.

இதனாலேயே கடந்த முறை சிறியளவிலான பரவல் காணப்பட்ட போதே நாடு முடக்கப்பட்டது. எனினும் இம்முறை வேகமான பரவல் இருக்கும் போதும் நாடு முடக்கப்படாமல் இருப்பதற்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

You may like this video