கொழும்பு முடக்கப்படலாம் என்ற தகவலை மறுத்துள்ள அரசாங்கம்

Report Print Banu in இலங்கை

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டு மக்களிடையே அச்ச உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையின் முக்கிய வர்த்தக செயற்பாடுகளின் இதயமகாவும், தலை நகரமாகவும் விளங்கும் கொழும்பு முடக்கப்படலாம் என்ற தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது.

கொழும்பு நகரில் தொற்று பரவினால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடுமென சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு மாநகரசபையை இரண்டு தினங்களுக்கு அடைத்துவிடவும், பொதுமக்கள் நிவாரண காரியாலய திணைக்களத்தை இரண்டு வாரங்களுக்கு பூட்டிவிடவும் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் அலுவலகம் இன்றையதினம் தெரிவித்துள்ளது.