அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதற்தடவையாக கலந்துகொண்ட நிலையில் அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயகக் கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
குறித்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தந்ததால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.