பல பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படலாம்! முக்கிய அறிவித்தல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

அடுத்த வாரம் கொரோனா தொற்றாளர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அடையாளம் காணப்படலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் விரைவில் உயிரிழப்பதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே வயோதிபர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,