கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் அரசாங்கம்

Report Print Kamel Kamel in இலங்கை

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு தலா 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக அரசாங்கம் தலா 5000 ரூபாயினை வழங்க உள்ளது.

மினுவாங்கொட, வெயாங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளைச் சேர்ந்த 72245 குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் 193 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களே நலன் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்காக அரசாங்கம் சுமார் 400 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி மாவட்டச் செயலாளருக்கு வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் இன்றைய தினம் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.