கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்ட்பாஸ், மோதர மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று காலை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்தப் பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இலங்கையின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.