உப கொத்தணி பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டையும் முடக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை

Report Print Ajith Ajith in இலங்கை

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அந்த வலயங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சம்மேளனத்தின் செயலாளர் ஷேனல் பெர்ணான்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்படும் போது அந்தந்த வலயங்களை முடக்காது போனால் வைரஸ் தீவிரமாக தொற்றுவதை தடுக்க முடியாது போய் விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே 13 மாவடங்களில் கொரோனா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது. அத்துடன் 5 மாவட்டங்களில் உப கொத்தணி பரவல்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் உப கொத்தணி பரவல்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உலக சுகாதார மையமும் நாட்டை முடக்காமல் வைரஸ் பரவும் பிரதேசங்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளமையை சம்மேளன செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்