மாவட்ட எல்லைகளில் கடும் கட்டுப்பாட்டு தீர்மானங்களை எடுக்கவும்! வைத்தியர் ஹரித அளுத்கே கோரிக்கை

Report Print Steephen Steephen in இலங்கை

கடந்த சில தினங்களாக அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான தொகுப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இதனுடன் நாட்டுக்குள் தற்போது மிகவும் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது நிலவும் நிலைமையில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுக்கு மிகப் பெரிய பொறுப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மாவட்டங்கள் ஊடாக ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட எல்லைகளுக்கு இடையில் கடுமையான கட்டுப்பாட்டு தீர்மானங்களை எடுக்குமாறு அவர் விசேட கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.