இலங்கைக்குள் இன்று மாத்திரம் இதுவரை 351 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இன்று மாலை வேளையில் வெளியான தகவலின்படி 263 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 227 பேர் பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்றாளிகளின் இணைப்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டனர்.
இதனை அடுத்து இன்றைய நாளில் இறுதியாக வெளியான தகவல் படி மேலும் 85 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தை மற்றும் மீனவ துறைமுகங்களில் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டவர்களின் நெருங்கிய இணைப்பை கொண்டிருந்தவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மினுவாங்கொட மற்றும் பேலியகொட தொற்று மற்றும் இணைப்பில் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4398ஆக உயர்ந்துள்ளது.