ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பல பில்லியன் ரூபாய் இழப்பு

Report Print Banu in இலங்கை

கடனில் மூழ்கியுள்ள இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 326 பில்லியன் ரூபாயை இழந்து நஷ்டமடைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் தற்போதைய கடன்கள் அதன் தற்போதைய சொத்துக்களை விட 211 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் விமான நிறுவனம் 326,341.48 மில்லியன் ரூபாய் நிகர இழப்பை சந்தித்ததாக அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.