ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

Report Print Kamel Kamel in இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 நோய்த் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நகரிற்குள் பிரவேசிப்பது வெளியேறுதல் என்பன வரையறுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நகரைச் சேர்ந்த பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.