கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டை முடக்க அவசியமில்லை! இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம்

Report Print Kamel Kamel in இலங்கை

கொவிட் - 19 வைரஸ் தொற்று இன்னமும் இலங்கையில் சமூகத் தொற்றாக மாறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரன இன்றைய தினம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

தற்பொழுது அடையாளம் காணப்பட்டு வரும் தொற்றாளிகள் அனைவரும் குறிப்பிட்ட கொத்தணிகளைச் சேர்ந்தவர்கள்.

சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் அனைத்து தீர்மானங்களையும் எடுத்து வருகிறது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தங்களது நடமாட்டத்தை வரையறுத்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு நாட்டை முடக்க வேண்டிய அவசியம் இன்னும் எழவில்லை என அரசாங்கம் கருகிறது.

நாட்டை முடக்காது நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளது.

அரசாங்கம் எதனையும் மூடிமறைக்கவில்லை, இன்னும் நாட்டில் சமூகத்தொற்று ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.