48 மணி நேரத்திற்குள் மாற்றம்! பயன்படுத்த தடை - பிரதான செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

கொரோனா தொடர்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வீடுகளில் தனிமைப்படுத்தல்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாணந்துறை, மொறட்டுவ மற்றும் ஹோமகமவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் உள்ளவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை களனி மற்றும் கடலோரப் பாதைகளில் செல்லும் ரயில் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் யூனியன்(எஸ்.எல்.ஆர்.எஸ்.எம்.யூ) தெரிவித்துள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரப் பிரதான செய்திகளின் தொகுப்பு,