இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக சீனாவால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எவையும் தடைப்படவில்லையென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - 13 இல் சீன வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் 4 சீன மற்றும் 2 இலங்கை தொழிலாளர்களுக்கு அறிகுறியேதுமற்ற நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ் அறிக்கையில் மேலும்,
இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த கடந்த 8 மாதங்களில், சீனாவின் வேலைத்திட்டமொன்றில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபட்டுத்தப்பட்ட முதல் சம்பவம் இது.
இதேவேளை, இலங்கையின் சமூக பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக, பெரும்பாலான சீன திட்டங்கள் கொரோனா பரவல் காரணமாக தடைப்படவில்லை.
இது தற்போதைய கடினமான கொவிட் சூழ்நிலையில் இலங்கையில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு பெருமளவில் பங்களிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.