கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமை என அகில இலங்கை ஜம்மியத்துல உலமா சபை தெரிவித்துள்ளது.
சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் உலமா சபையின் ஆலோசகர் முனிர் முலல்ப்பர் மௌலவி இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்காது இருப்பது முஸ்லிம் மக்களை பழிவாங்கும் செயல்.
அது வேண்டும் என்றே செய்யும் நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை அடக்க செய்ய இடமளிக்காமை ஒரு மனித உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.