சில விடயங்கள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக ஊடகவியலாளர்களும், சமூக ஊடகப் பயனாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் கடந்த சில நாட்களில் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இருக்குமாயின் ஊடகவியலாளர்கள் மீதும் கைவைக்க வேண்டாம் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாட்டின் வறுமை ஒழிப்புக்கு ஆரம்ப புள்ளியாகும். இந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக வரவேற்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,