சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள ஆசிய பசுபிக் சட்ட சம்மேளனம்

Report Print Ajith Ajith in இலங்கை

சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் ஆசிய பசுபிக் சட்ட சம்மேளனம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல் இருப்பது சட்ட ரீதியற்ற செயல் என்றும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை விடுவித்து சட்டத்தரணியாக அவர் பணியாற்றுவதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் சம்மேளனம் கோரியுள்ளது.

கைது செய்யப்பட்ட நாளில் இருந்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

உரிய செயல்முறைகளை முன்னெடுக்க முடியாமை காரணமாகவே அவரை சட்டத்தின் முன்னிலையில் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்படுத்தப்படுகிறது என்பதை காணமுடிகிறது.

அத்துடன் அவரின் கைது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் உரிய விதிகளுடன் இணங்கவில்லை என்றும் ஆசிய பசுபிக் சட்டத்தரணிகள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.