பல மில்லியன் ரூபாய் சம்பளம் பெறும் ஸ்ரீலங்கன் விமான நிறுவன அதிகாரிகள்

Report Print Steephen Steephen in இலங்கை

மில்லியன் ரூபாய் வரையில் சம்பளம் பெறும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரியின் கல்வி மற்றும் தொழில் தகுதி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சில உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் இந்த இரகசியமான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் மனித வள பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.

தகுதி இன்றி அரசியல் நியமனங்களை பெற்றுள்ள உயர் அதிகாரிகள் இந்த விசாரணை காரணமாக அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

10 லட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறும் 200இற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், உயர் பதவிகளை வகிப்போரின் சம்பளத்தை 2 லட்சமாக வரையறுத்திருந்தார்.

கொரோனா தொற்று நோய் காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையிலும் குறித்த அதிகாரிகளுக்கு இந்த சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் ஊழியர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்குவதற்காக வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது.

you my like this video