இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை ஒபாமாவின் கருத்து உண்மையே – சார்ள்ஸ் எம்.பி

Report Print Gokulan Gokulan in இலங்கை
413Shares

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையை அதனைத் தடுப்பதற்கு ஐ.நா. தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா வெளியிட்ட கருத்து உண்மைதான், என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் கூறியவை வருமாறு,

மனித உரிமை ஆணைக்குழுவானது பிரதான நிறுவனமாக இருக்கவேண்டும். அதன் அதிகாரங்கள் பலப்படுத்தப்படவேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, ஆனால் அதற்கு குறித்த நிறுவனத்தால் கடந்த காலங்களில் தீர்வுகள் வழங்கப்படவில்லை.

இதனால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே , மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.