ஜப்பானிய சிறுமியை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையர் கைது

Report Print Ajith Ajith in இலங்கை
496Shares

15 அகவையைக் கொண்ட ஜப்பானிய சிறுமியை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 அகவையைக் கொண்ட இந்த இலங்கையர் ஜப்பானிய சிறுமியை நாட்டுக்கு அழைத்து வந்து அவருடன் 7 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் மீது சிறுவர் துஸ்பியோகம் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தில் குறித்த நபர் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஏற்கனவே ஜப்பானில் படித்துக் கொண்டிருந்த போது பணக்காரர் ஒருவர் வீட்டில் பகுதி நேரப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.

இந்தநிலையில் அந்த பணக்காரக் குடும்பத்தின் ஒரேயொரு மகளையே அவர் இலங்கைக்கு கடத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.