திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன் ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் ஏற்பட்ட நெருக்கடி

Report Print Dias Dias in இலங்கை
101Shares

திருகோணமலை நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் கடமைகளுக்கு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்பாக செய்தி சேகரிக்க சென்ற போது வீதிப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் எனது கடமைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

’நீதிமன்றத்திற்கு முன்பாக நின்றுகொண்டு கமராவை வெளியில் எடுத்தபோது, சந்தியில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசில் அடித்து என்னை அவர் அருகில் வரச்சொன்னார். நானும் நடந்து சென்றேன்.

நீ யார் எதற்கு கமராவை வைத்திருக்கின்றாய்? என கேட்டார். நானும் என்னுடைய பேர்ஸிலிருந்து ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து அவருக்கு காண்பித்து நான் ஒரு ஊடகவியலாளர் செய்தி சேகரிக்க இங்கு வந்துள்ளேன் என்று அவரிடம் சொன்னேன்.

அதன் பிறகு அவர் ஊடகவியலாளர் அடையாள அட்டையை ஏன் கழுத்தில் அணியவில்லை . பேர்ஸில் ஒளித்துவைத்துள்ளார் என என்னிடம் கேள்விகளை எழுப்பினார்.

நல்ல வேளையாக சுமே லங்கா என்பவர் அவ்விடத்திற்கு வந்தார். இல்லை எனில் எனது நிலை என்ன ஆகியிருக்குமோ எனத் தெரியவில்லை. என்னுடைய தந்தையின் காலத்தில் ஊடகவியலாளர் என்றால் ஒரு மரியாதை இருந்தது. இப்பொழுது அவை எதுவும் இல்லை. நிம்மதியாக ஒரு ஊடகவியலாளனால் தன்னுடைய கடமையை கூட செய்ய முடியாதுள்ளது எனக் கூறியுள்ளார்.