கொழும்பு - வெள்ளவத்தையில் பகுதியில் உள்ள தனது வீட்டில் இலங்கை நேரம் 06.5 மணிக்கு உயிரிழந்த மாவீரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் விளக்கேற்றியுள்ளார்.
இதன்போது சுடரேற்றி உணர்வுபூர்வமாக தனது அஞ்சலிகளை அவர் செலுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விடாமல் கடுமையான கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்து உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலித்து வருகின்றனர்.