தம்பி பிரபாகரனிடம் மறைந்துள்ள பண்புகள்; இந்திரா காந்தியை வரவேற்க காத்திருந்த பல தகவல்களைக் கூறும் மூத்த வழக்கறிஞர்

Report Print Banu in இலங்கை
1094Shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததைப்போல் தமிழீழத்தை பெற்றுத்தந்து தமிழீழ மக்களுக்குத் தாயாக விளங்குவார் என விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உறுதியாக நம்பினார் என அவருடன் போராட்ட காலங்களின் ஆரம்ப கட்டங்களில் உடனிருந்த தமிழக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பேச்சாளரும், சட்டத்தரணியுமான ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எமது ஊடகத்திற்கு இன்றையதினம் வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், `

இந்திரா அம்மா தமிழீழத்தை நிச்சயமாக பெற்றுத்தருவார். தமிழீழம் நிச்சயம் அமையும். யாழ். பலாலி விமான நிலையத்தில் உலக நாடுகளின் அனைத்து அதிபர்களுடனும் சேர்த்து அவரையும், நெடுமாறன், அனிதா பிரதாப், நீங்கள் உள்ளிட்டவர்களை நான் வரவேற்பேன் என என்னிடம் பிரபாகரன் கூறினார்.

இந்திராக் காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரிடம் நான் வினவியபோது அவர் அது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக கூறினார் எனத் தெரிவித்துள்ளார்.