இலங்கை முழுவதும் கொரோனா பரவக்கூடிய பிரதேசமாக அறிவிப்பு! பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை

Report Print Steephen Steephen in இலங்கை
1786Shares

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று பரவக்கூடிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரமல்ல, எந்த பிரதேசத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 13 பொலிஸ் பிரிவுகள் மற்றும் வெல்லம்பிட்டிய, மட்டக்குளி, அட்டலுகம, அலவத்துகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

you my like this