யாழ் நகர மக்களின் அபிவிருத்தியை ஈ.பீ.டி.பியுடன் இணைந்து முடக்கியது கஜேந்திரகுமார் அணி

Report Print Gokulan Gokulan in இலங்கை
768Shares

யாழ். மாநகர சபையின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ். மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் 19 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ள நிலையில், 2 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

அந்த வகையில் இலங்கை தமிழரசிக் கட்சியின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்ரஸ்ஸின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ் நகர மக்களின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.