எதிர்வுகூறப்பட்டுள்ள புரெவி சூறாவளி பாதிப்பு! அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Report Print Ajith Ajith in இலங்கை
240Shares

இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள ‘புரெவி’ சூறாவளியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று இரவு 7 மணிமுதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் புரெவி சூறாவளியானது இலங்கையை ஊடறுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, படகுகள் மற்றும் கடற்கரைகளில் தரித்துள்ள படகுகளை நிலப்பகுதிகளுக்கு நகர்த்துமாறு அனைத்து படகு உரிமையாளர்களுக்கும் அறிவிக்குமாறு மீன்வள மற்றும்நீர்வளத் துறை பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து உதவி இயக்குநர்களும் இது தொடர்பாக அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் மீன்பிடிசமூகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.