ஈரானிய அணு விஞ்ஞானி கலாநிதி மொஷன் பகாரிஸாத்தின் படுகொலைச் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
படுகொலைகள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான தீவிரவாத செயற்பாடுகளை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கை வலியுறுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகளின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.