ஜப்பானில் உள்ள துறைமுகங்களில் தேங்கியுள்ள 1364 வாகனங்கள்! இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

Report Print Ajith Ajith in இலங்கை
438Shares

ஜப்பானில் இயங்கி வரும் இலங்கை ஆட்டோமொபைல் அசோசியேஷன் நிறுவனம் தாம் பெற்றுக்கொண்டுள்ள கொள்வனவு கட்டளைக்கு அமைய சிற்றூர்ந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது.

எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் இந்த கொள்வனவு கட்டளைகளை தாம் நிறைவேற்ற வேண்டியுள்ளதாக அந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கிறது.

இலங்கையர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அதன் இலக்கங்கள் என்பன ஜப்பானிய தூதரக அலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானில் இயங்கி வரும் இலங்கை ஆட்டோமொபைல் அசோசியேஷன் நிறுவனத்தின் தலைவரான எஸ்.ஏ.நிஷாந்த் மீகல்ல தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு அனுப்புவதற்காக ஜப்பானில் உள்ள துறைமுகங்களில் 1இ 364 வாகனங்கள் தேங்கி இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு அவை தரித்து நிற்பதற்கான கட்டண தொகைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இது தமக்கு ஒரு பாரிய நட்டமாக அமைந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை ஏற்கனவே இலங்கையில் இருந்து பெறப்பட்டுள்ள கொள்வனவு கட்டளைகளின் அடிப்படையில் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பவே வாகனங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

எனவே அந்த வாகனங்களை ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாது என்றும் மீகல்ல தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறு அந்த வாகனங்களை ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்தால் தமக்கு பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே துறைமுகங்களில் சிக்கி இருக்கின்ற வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஜப்பானில் இயங்குகின்ற இலங்கையின் ஆட்டோமொபைல் அசோஷியேஷன் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதேவேளை கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி அன்று அரசாங்கத்தின் சார்பில் கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல மேலும் ஒரு வருட காலத்திற்கு வாகன இறக்குமதியை தடை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது