மட்டக்களப்பு - கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பாக எழுந்த பிரச்சினையினை ஆராய்வதற்கான கள விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் அங்கு எழுந்த எதிர்ப்புக்காரணமாக குறித்த பகுதியிலிருந்து திருப்பியனுப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு குசலானமலைப்பகுதியில் இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் தொல்பொருள்தொடர்பிலான பிரச்சினையை ஆராயச் சென்ற இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கும், தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் சென்று எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக வியாழேந்திரன் மற்றும் விதுர விக்ரம நாயக்க அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.