பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் - உபுல் ரோஹன

Report Print Kamel Kamel in இலங்கை
28Shares

பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படத் தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் இரண்டாம் அலை கொழும்பு மாநகரசபையை தாண்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வியாபிக்கும் ஓர் நிலைமையை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கொவிட் நோய்த் தொற்றை சுகாதார தரப்பினரால் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலமானது மிகவும் ஆபத்தான நிலைமையிலேயே கொண்டாடப்பட வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் காலப் பகுதியில் அரசாங்கமும், பொதுமக்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தவறினால் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படக்கூடிய துர்பாக்கிய நிலைமை உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இன்னும் கொவிட் சமூகத் தொற்றாக பரவவில்லை என பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏனைய உலக நாடுகளின் கொவிட் நிலைமையுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் இன்னும் சமூகத் தொற்று ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.