நாடு முழுவதும் கொரோனா உப கொத்தணிகள் அதிகரிப்பு - பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம்

Report Print Steephen Steephen in இலங்கை
229Shares

எதிர்பார்க்காத பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் உப கொத்தணிகள் உருவாகும் ஆபத்து கடந்த சில தினங்களில் துரிதமாக அதிகரி்த்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

காலி, இரத்தினபுரி, வெலிகமை, ஹட்டன், பதியபெல்ல, ஹிரிபிட்டிய, யாழ்ப்பாணம், மொனராகலை, படல்கும்புர, அட்டாளைச்சேனை மற்றும் மலையக பகுதிகளில் இந்த உப கொத்தணிகள் உருவாகி வருவதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளளார்.

இதனை தவிர தொழில் சார்ந்த மட்டங்களிலும் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. பொலிஸ், துறைமுகம், சிறைச்சாலைகள், சுகாதார துறை ஆகியவற்றி் தற்போது உப கொத்தணிகள் அதிகரித்து வருவதாகவும் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.