திருகோணமலையில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

Report Print Dias Dias in இலங்கை
735Shares

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த 54 வயதுடைய சுமண பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் தமது பணியின் போது நெஞ்சு நோவு காரணமாக மயக்கமடைந்துள்ளார்.

அவரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர்.

சடலம் திருமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை புரிந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.