காலியில் கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவன்புர தெரிவிப்பு

Report Print Steephen Steephen in இலங்கை
24Shares

காலி - தேத்துகொட பிரதேசத்தில் தனது வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது PCR பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தெரியவருகிறது.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதானி விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவன்புர தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் இறந்த பின்னர் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் இன்று பிற்பகல் கிடைத்துள்ளதுடன், அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகி உள்ளது எனவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.