தமிழகம் கோயம்புத்தூரில் இந்த வருட ஆரம்பத்தில் மரணமான இலங்கையின் பாதாள உலகக்தலைவர் அங்கொட லொக்கா தொடர்பில் தடயவியல் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து இதனை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இந்த கடிதம் 2020 டிசம்பர் 7ம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.
அங்கொட லொக்காவின் பெற்றோரது இரத்த மாதிரிகளை பெற்று அங்கொட லொக்காவின்மரணத்தை உறுதிச்செய்வதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கொட லொக்கா இலங்கையில் 8 கொலைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தநிலையில் தப்பிச்சென்று தமிழகம் கோயம்புத்தூரில் வசித்து வந்த நிலையிலேயே கடந்த மார்ச் மாதத்தில் மாரடைப்பால் மரணமானார்.