ஆசிரியர்களாக இலங்கை விமானப் படையினர்? வெடித்தது சர்ச்சை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
376Shares

பாடசாலைகளில் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிந்திருக்கவில்லை என்பதுடன் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு எந்த அனுமதியையும் வழங்கியிருக்கவில்லையென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளில் விமானப் படையினர் ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேவர்தனவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,