கொரோனா ஊசி மருந்தை துரிதமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை! ஜனாதிபதி தெரிவிப்பு

Report Print Steephen Steephen in இலங்கை
79Shares

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள ஊசி மருந்துகளில் ஒன்றை துரிதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாறை ,உகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் லாவூகல ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தில் 5வது சட்ட நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் வந்த கொரோனா வைரஸ் பரவல் அலையை நாங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தினோம். இரண்டாவது முறையாக வந்துள்ள வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால் மக்கள் அதனை புரிந்துக்கொண்டு கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியா, உலக சுகாதார அமைப்பு, சீனா, ரஷ்யா ஆகியவற்றிடம் இருந்து ஊசி மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊசி மருந்து தயாரானது உடனடியாக எமக்கு வழங்குமாறு நான் இந்திய பிரதமர் மற்றும் சீனா ஜனாதிபதி ஆகியோருக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன்.

உலக சுகாதார அமைப்பும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஊசி மருந்துகளில் ஒரு பகுதியை எமக்கு வழங்கும்.

மீதமுள்ள தொகை நாங்கள் விலை கொடுத்து கொள்வனவு செய்ய உள்ளோம். ஊசி மருந்து தேவையானவர்களுக்கு அதனை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஏற்கனவே நாங்கள் ஆரம்பித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.