யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி விவகாரம்: தனியுமா பதற்றம்?

Report Print Gokulan Gokulan in இலங்கை
196Shares

யாழ் பல்கலைக்கழகத்தில் அழைக்கப்பட்டிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றைய தினம் இரவோடு இரவாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் ஒரு பதற்றமான சூழ்நிலை அங்கு நிலவி வருகின்றது.

மாணவர்களும், மக்களும், கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு ஆர்பாட்டங்களையும், கண்டனங்களையும் இரவு முழுவதும் எழுப்பியவண்ணம் இருந்தனர். மிரட்டல்கள், கைதுகள் என்று எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அங்கு ஏற்பட்டிருந்த எழுச்சி சற்றும் தனியாத வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள், கடையடைப்பு எச்சரிக்கைகள் என்று உள்நாட்டில் போராட்டங்கள் தொடருகின்ற அதேவேளை, பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த அத்துமீறல் நடவடிக்கை தமிழ் நாட்டில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சரின் கண்டணம், தமிழ் உணர்வாளர்களின் கண்டனம், சிறிலங்கா தூதரக முற்றுகை என்று இந்த விடயம் மற்றொரு பரிமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தல் வாயிலில் சற்று முன் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் :