யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக நாளைய தினம் களம் இறங்கும் முஸ்லிம் சமூகம்

Report Print Gokulan Gokulan in இலங்கை
1962Shares

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்புக்கெதிராக வட கிழக்கில் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் சிவில் சமுக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தகர்களையும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி, சமகி ஜன பலவேகய சார்பு அரசியல் தாலைமைகளும் இதற்கான ஆதரவை வெளியிட்டுள்ளன.