ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
நீதிமன்றை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தி ரஞ்சனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோரின் முன்னிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
கொவிட் அபாயம் மற்றும் உச்ச நீதிமன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஆகிய காரணிகளினால் இந்த வழக்கின் தீர்ப்பு காலம் தாழ்த்தப்பட்டிருந்தது.
நீதிபதிகள், சட்டத்தரணிகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட் கருத்து தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.