இலங்கையில் தீவிரமடைந்து வரும் கொரோனா! அதிக ஆபத்துள்ள பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Report Print Banu in இலங்கை
518Shares

இலங்கையில் கொவிட் தொற்றால் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளின் சமீபத்திய வரைபடத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் அடிப்படையில் இவ் வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் புதிய பல பகுதிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டு அப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.