இலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் முக்கிய பொது அறிவிப்பு

Report Print Ajith Ajith in இலங்கை
218Shares

இலங்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து விரைவில் முக்கியமான பொது அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இதனை இலங்கையின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தடுப்பூசியைப் குளிரூட்டியில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குநர் பாலித கருணாபேமா தெரிவித்துள்ளார்.

கோவேக்ஸ் வசதி மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் தடுப்பூசி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு விரிவானஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவான, நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கான முன்னுரிமை பட்டியலை ஏற்கனவே தயாரித்து, அந்த பட்டியலை உலக சுகாதார அமைப்புக்கு இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகவும் கருணாபேம குறிப்பிட்டுள்ளார்.